சமிகா கருணாரத்னே 
செய்திகள்

2-வது ஒருநாள்: அருமையாகப் பந்துவீசி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை (ஹைலைட்ஸ் விடியோ)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இலங்கை அணி.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இலங்கை அணி.

பல்லேகலேவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 47.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. குசால் மெண்டிஸ் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். 

மழை காரணமாக ஆஸி. அணிக்கு 43 ஓவர்களில் 216 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் என்கிற நல்ல நிலைமையில் இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் நெருக்கடி அளித்தார்கள். கடைசியில் 37.1 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் (டி/எல் முறையில்) தோல்வியடைந்தது ஆஸ்திரேலிய அணி. கடைசி 5 விக்கெட்டுகளை 19 ரன்களுக்கு இழந்ததால் இந்த நிலை ஏற்பட்டது. 1998-க்குப் பிறகு இப்போது தான் இலக்கை விரட்டும்போது குறைந்த ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. சமிகா கருணாரத்னே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT