அல்ஸாரி ஜோசப் (கோப்புப் படம்) 
செய்திகள்

டெஸ்ட் தொடர்: முதல் இன்னிங்ஸில் 103 ரன்களுக்குச் சுருண்ட வங்கதேச அணி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வங்கதேச அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்டுகள், 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. 

நார்த் சவுண்டில் தொடங்கிய முதல் டெஸ்டில்  முதல் இன்னிங்ஸில் 32.5 ஓவர்களில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேச அணி. கேப்டன் சகிப் அல் ஹசன் மட்டும் நன்கு விளையாடி 51 ரன்கள் எடுத்தார். ஜேடன் சீல்ஸ், அல்ஸாரி ஜோசப் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

முதல் நாள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 48 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது. கேப்டன் பிராத்வெயிட் 42, போனர் 12 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட்டில் நான்... சாக்‌ஷி மாலிக்!

ஈரானிடம் தோற்ற இந்திய அணி! இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்ததா?

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

SCROLL FOR NEXT