முகப்பு
செய்திகள்

இலங்கை- ஆஸ்திரேலியா தொடர்; ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக விலகல்?

ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகுவதாக தகவல் சொல்லப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
கோப்புப் படம்
பகிர்:


ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகுவதாக தகவல் சொல்லப்படுகிறது. 

ஆஸ்திரேலியா இலங்கையுடன் டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது. தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 1-1 என்ற சமநிலையில் உள்ளது. 3வதுப் போட்டியில் இருந்து முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் விலக உள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக ஜோஸ் இங்கிலிஷ் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் மருத்துவ குழு அவரை கவனமாக பார்த்துக்கொள்வதாக தகவல் சொல்லப்படுகிறது. 

ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் சீன் அப்பாட் (விரல் உடைந்தது), கேன் ரிச்சார்ட்சன் (தசை பிடிப்பு), மிட்செல் ஸ்டார்க் (விரலில் காயம்), மிட்செல் மார்ஷ் (பின்னங்கால் தசைப்பிடிப்பு) மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் (தசைப்பிடிப்பு) ஏற்பட்டுள்ள நிலையில் மற்றுமொரு வீரருக்கு காயம் ஏற்பட்டிருப்பது ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்பதை இனிவரும் போட்டிகளில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

முழு கட்டுரையைப் படிக்க →