கோப்புப் படம் 
செய்திகள்

இந்திய வீரர்களினால் டெஸ்ட் போட்டி ஆபத்துக்குள்ளானது: டிம் பெயின்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் டிம் பெயின் இந்திய வீரர்களின் ஒழுங்கீனமான செயலால் 2020-21 டெஸ்ட் தொடர் ஆபத்துக்குள்ளானது என தெரிவித்துள்ளார். 

DIN

ஆஸ்திரேலியாவின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் டிம் பெயின் இந்திய வீரர்களின் ஒழுங்கீனமான செயலால் 2020-21 டெஸ்ட் தொடர் ஆபத்துக்குள்ளானது என தெரிவித்துள்ளார். 

இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை 2020-21 தொடரின் போது இந்திய வீரர்கள் பாதுகாப்பு வலையத்தை மீறி செயல்பட்டதாக ஆஸ்திரேலியவின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் டிம் பெயினி தெரிவித்துள்ளார். ஒரு ரசிகர் சமூக வலைதலத்தில் ரோகித் சர்மா, ரிஷப் பந்த், சுப்மன்கில், பிரித்வி ஷா, நவ்தீப் சைனி ஆகியோர் ஓட்டலில் இருக்கும் விடியோவை வெளியிட்டு இருந்தார். அப்போது ஆஸ்திரேலியாவின் ஊடகமும் இதே புகாரை எழுப்பிய நிலையில் பிசிசிஐ அந்த குற்றத்தினை மறுத்ததும் குறிப்பிடத்தக்கது. 

இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 2020-21 டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற்று வரலாற்று சாதனையை படைத்தது. அதனால் அதை ஆவணப்படமாக (பண்டோன் மெயின் தா தும்)எடுத்தார் நீரஜ் பாண்டே. அந்த தொடர் வூட் ஓடிடி தளத்தில் நேற்று வெளியானது. அந்தத் தொடரில் டிம் பெயின் கூறியிருப்பதாவது: 

அந்த 4-5 பேரினால் டெஸ்ட் தொடரே ஆபத்துக்குள்ளானது. உண்மையாக சொல்ல வேண்டுமானால் ஒரு கப் நந்தோ சிக்கன், சிப்ஸ் அல்லது வேறு எதோ ஒன்றுக்காக இப்படி சுயநலமாக செயல்பட்டது தவறு. எங்கள் அணியினர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை குடும்பத்துடன் கொண்டாடாமல் கிரிக்கெட் விளையாட வந்திருந்தனர். அந்த தியாகம் எதிரணிக்கும் இருக்க வேண்டும். பொறுப்பில்லாமல் கரோனா விதிகளை மீறி இந்திய வீரர்கள் செயல்பட்டது எங்களது அணிக்கு எரிச்சலாக இருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT