செய்திகள்

ரிஷப் பந்த் அதிக எடையுடன் இருக்கிறார்: முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து

இந்தியாவின் தற்போதைய டி20 கேப்டன் ரிஷப் பந்த் அதிக எடையுடன் இருப்பதால் கீப்பிங் செய்வதில் பிரச்சனையுள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்துத் தெரிவித்துள்ளார். 

DIN


இந்தியாவின் தற்போதைய டி20 கேப்டன் ரிஷப் பந்த் அதிக எடையுடன் இருப்பதால் கீப்பிங் செய்வதில் பிரச்சனையுள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்துத் தெரிவித்துள்ளார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் ரிஷப் பந்த் ரன்களை குவிக்க முடியாமல் திணறி வருகிறார். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவரது பேட்டிங் குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா ரிஷப் பந்த் பற்றி கூறியதாவது: 

நான் ரிஷப் பந்தின் கீப்பிங் குறித்து பேச உள்ளேன். வேகப் பந்து வீச்சாலர்கள் பனெது வெசும் போது அவர் குனியாமல் நின்றுக் கொண்டே இருக்கிறார். அநேகமாக அவர் அதிக எடையுடன் இருப்பதால் விரைவாக ரியாக்ட் செய்ய முடியவில்லை. அவர்து உடல் நலத்தில் அவர் இன்னும் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் ரிஷப் முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா? 

அவரது பேட்டிங் ஸ்டைலையும் அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். அவருக்கு பதிலாக கேஎஸ் பரத் அல்லது விரிந்தமான் சாஹாவை விளையாட வைக்கலாம். ரிஷப் பந்திற்கு ஓய்வு அளிக்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன நாயகன் தணிக்கைச் சான்று! பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விசாரணை!

ஓய்வை அறிவித்தார் ஆஸி. கேப்டன் அலீசா ஹீலி.. 8 உலகக் கோப்பைகளை வென்றவர்!

பொங்கல்: சிறப்புப் பேருந்துகளில் 4.88 லட்சம் பேர் பயணம்

தில்லியில் இருந்து புறப்பட்டார் விஜய்!

விளையாட்டுக் கல்வியும் வேலைவாய்ப்புகளும்!

SCROLL FOR NEXT