முகப்பு
டிராவிஸ் ஹெட்
செய்திகள்

வருங்காலத்தில் டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக களமிறங்குவார்: கில்கிறிஸ்ட்

இனி  வரும் காலங்களில் டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக டேவிட் வார்னருடன் களமிறங்குவார் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:34 AM
டிராவிஸ் ஹெட்
பகிர்:

இனி  வரும் காலங்களில் டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக டேவிட் வார்னருடன் களமிறங்குவார் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்துத் தெரிவித்துள்ளார்.

28 வயதான டிராவிஸ் ஹெட் இலங்கைத் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும், இவர் ஆஷஸ் தொடரிலும் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதினை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

“நீண்ட நாள் நோக்கில் அநேகமாக அடுத்த 12 மாதங்களில் டிராவிஸ் ஹேட் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரராக விளையாடுவார். 

அவர் தொடக்க வீரராக ஒருநாள் போட்டிகளில் விளையாடினால் அணிக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். மேலும் சிரப்பான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு வலுவான அடித்தளத்தை அளிப்பார் என நினைக்கிறேன். 

ஆரோன் பின்ச்சால் அடுத்த ஒருநாள் உலக கோப்பை வரை விளையாட முடியுமா எனத்தெரியவில்லை.ஆரோன் பின்ச் ஓய்வு பெற்ற பிறகு அந்த இடத்திற்கு இவர் சரியாக பொருந்துவார் என நினைக்கிறேன்” என கில்கிறிஸ்ட் கருத்துத் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →