செய்திகள்

நெதர்லாந்து கேப்டன் பீட்டர் சீலார் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு

DIN

நெதர்லாந்து அணியின் கிரிக்கெட் கேப்டன் பீட்டர் சீலார் காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். 

34 வயதான பீட்டர் சீலார் 2006 முதல் நெதர்லாந்து அணிக்காக விளையாடி வருகிறார். ஆல்ரவுண்டராக அணியில் முக்கிய பங்காற்றினார். 57 ஒருநாள் போட்டியில் விளையாடி 57 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 77 போட்டிகளில் விளையாடி 58 விக்கெட்டுகளை எகானமி 6.83 என்ற விதத்தில் சிறப்பாக பந்து வீசியுள்ளார். பேட்டிங்கில் 591 ரன்களையும் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 96 ரன்களை எடுத்துள்ளார்.  

2009,2014 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணியை தோற்கடித்த  நெதர்லாந்து அணியில் இடம் பெற்றவர் சீலார் என்பது குறிப்பிடத்தக்கது. 

“2020 முதல் முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறேன். இனிமேலும் என்னால் முடிந்ததை கொடுக்க முடியவில்லை” என பீட்டர் சீலார் கூறினார். 

பீட்டர் சீலாருக்கு அடுத்து நெதர்லாந்தின் விக்கெட் கீப்பர் ஸ்காட் எட்வர்ட்ஸ் கேப்டன்சி பொறுப்பை ஏற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT