படம்: டிவிட்டர் | ஐடிசிஏ 
செய்திகள்

காது கேளாதோருக்கான டி20 போட்டி: ஆந்திரம் கோப்பை வென்றது

19 வயதிற்குள்ளான காது கேளாதோருக்கான முதல் டி20 தொடரில் ஆந்திரம் கோப்பையை வென்று சாதனைப் புரிந்துள்ளது.

DIN

19 வயதிற்குள்ளான காது கேளாதோருக்கான முதல் டி20 தொடரில் ஆந்திரம் கோப்பையை வென்று சாதனைப் புரிந்துள்ளது.  

இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் சங்கம் (IDCA)முதன் முறையாக 19 வயதிற்குள்ளான காது கேளாதோருக்கான டி20 தொடரை துவக்கியது. ஜூன் 16 முதல் ஜூன் 19 இப்போட்டிகள் நடைப்பெற்றது.

ஆந்திரம் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. எதிரணியாகிய  குஜராத்தை 97 ரன்களுக்குள் சுருட்டியது ஆந்திரம். 

ஆந்திராவின் பவுலர் விஜய பாஸ்கர் 3 விக்கெட்டுகளை எடுத்து 11 ரன்களை மட்டுமே கொடுத்தார். மேலும் இவர் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதினையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர், சுமித் ஜெயின் பரிசளிப்பு விழாவில் கூறியதாவது:

இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் சங்கமாகிய நாங்கள் முதன் முறையாக இந்தத் தொடரின் வெற்றியாளராக ஆந்திரம் காது கேளாதோர் அமைப்பிற்கு பரிசளிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எல்லா அணியின்  வீரர்களும்  கடினமான உழைத்ததினால் இந்த சீசன் வெற்றியடைந்துள்ளது. எதிர்காலத்தில் இன்னும் இது போன்ற அதிகமான திறமைசாலிகளை உருவாக்குவதற்கு எதிர்நோக்கியுள்ளோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT