செய்திகள்

ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்று: ரசிகர்களுக்கு அனுமதி

2021-22-ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு மும்பை - மத்தியப் பிரதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

DIN

2021-22-ம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு மும்பை - மத்தியப் பிரதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

பெங்களூரில் நடைபெற்ற மும்பை - உத்தரப் பிரதேச அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 5-ம் நாளில் இறுதியில் 746 ரன்கள் முன்னிலை பெற்ற மும்பை அணி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் காரணமாக இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது. 41 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, 2016-17-க்குப் பிறகு ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது 

அலூரில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில் பெங்காலுக்கு எதிராக மத்தியப் பிரதேச அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

நாளை (ஜூன் 22) பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இறுதிச்சுற்றில் மும்பை - மத்தியப் பிரதேச அணிகள் மோதுகின்றன. 

இந்நிலையில் ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றுக்கு ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இலவச அனுமதி என்பதால் இறுதிச்சுற்றைக் காண ஏராளமான ரசிகர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

SCROLL FOR NEXT