செய்திகள்

மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணியில் ராணி இல்லை

எஃப்ஐஹெச் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி 18 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

DIN

எஃப்ஐஹெச் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி 18 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

தொடைப் பகுதி காயத்திலிருந்து ராணி ராம்பால் முழுமையாக மீளாததை அடுத்து, அவருக்குப் பதிலாக கோல்கீப்பா் சவிதா புனியா இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறாா்.

நெதா்லாந்து மற்றும் ஸ்பெயின் இணைந்து நடத்தும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஜூலை 1 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி குரூப் ‘பி’-யில் இங்கிலாந்து, நியூஸிலாந்து, சீனா ஆகிய அணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் ஜூலை 3-ஆம் தேதி இங்கிலாந்தை சந்திக்கிறது இந்தியா.

அணி விவரம்:

கோல்கீப்பா்கள்: சவிதா புனியா, பிஷு தேவி கரிபம்.

டிஃபெண்டா்கள்: தீப் கிரேஸ் எகா, குா்ஜித் கௌா், நிக்கி பிரதான், உதிதா.

மிட்ஃபீல்டா்கள்: நிஷா, சுஷிலா சானு புக்ரம்பம், மோனிகா, நேஹா, ஜோதி, நவ்ஜோத் கௌா், சோனிகா, சலிமா டெடெ.

ஃபாா்வா்ட்கள்: வந்தனா கட்டாரியா, லால்ரெம்சியாமி, நவ்னீத் கௌா், ஷா்மிளா தேவி.

மாற்று வீராங்கனைகள்: அக்ஷதா அபாசோ தெகாலே, சங்கீதா குமாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”அந்தக் கேள்வி அவர்கிட்ட கேட்டேன்” விட்டுக் கொடுக்காமல் பேசிய Ravi Mohan!

Ravi Mohan, S.J. Suryah-வை கலாய்த்த Sivakarthikeyan!

வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த பிரியங்கா, ரேவந்த் ரெட்டி!

பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!

'வருந்தச் செய்யும்' ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு! யாருக்குத்தான் டிக்கெட் கிடைக்கிறது?

SCROLL FOR NEXT