கோப்புப் படம் 
செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளாக ரோகித் சர்மா: ட்விட்டரில் சிறப்பு பதிவு

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இன்றுடன் (ஜூன் 23) 15 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.

DIN

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இன்றுடன் (ஜூன் 23) 15 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன.

கடந்த 2007ஆம் ஆண்டு இந்த நாளில் தான் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது முதல் ஒரு நாள் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக முதன் முதலாக சர்வதேசப் போட்டிகளில் களம் கண்டார். கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக ரோகித் சர்மா அறிமுகமாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 

இந்நிலையில், ரோகித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ” எல்லோருக்கும் வணக்கம். 15 ஆண்டுகளாக எனக்குப் பிடித்த இந்திய அணியின் ஜெர்சியில் விளையாடுகிறேன். இந்திய அணியில் அறிமுகமாகி இன்றுடன் நான் என்னுடைய சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறேன். என்ன ஒரு அருமையான பயணம். நிச்சயம் என்னுடைய இந்த கிரிக்கெட் பயணம் எனது மீதமுள்ள வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியான நினைவுகளைத் தரும். என்னுடைய இந்த பயணத்தில் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி கூற கடைமைப்பட்டிருக்கிறேன். குறிப்பாக மக்களுக்கு நன்றி கூற மிகவும் கடைமைப்பட்டிருக்கிறேன். இன்று நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்க அவர்கள் தான் காரணம். அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT