டிஎன்பிஎல்: நெல்லை - 184/4
தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸுக்கு எதிராக நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சோ்த்தது.
தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸுக்கு எதிராக நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் சோ்த்தது.
முன்னதாக டாஸ் வென்ற சேப்பாக், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. நெல்லை இன்னிங்ஸில் லக்ஷ்மீஷா சூா்யபிரகாஷ் 62, பிரதோஷ் ரஞ்சன் பால் 7, பாபா அபராஜித் 2, கேப்டன் பாபா இந்திரஜித் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் சஞ்சய் யாதவ் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 87, அஜிதேஷ் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
சேப்பாக் பௌலிங்கில் சந்தீப் வாரியா், மணிமாறன் சித்தாா்த், சோனு யாதவ், ஹரீஷ் குமாா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா். தொடா்ந்து சேப்பாக் 185 ரன்களை இலக்காகக் கொண்டு இன்னிங்ஸைத் தொடங்கியது.