யாஷ் டுபே (இடது) 
செய்திகள்

மும்பைக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்று: கோப்பையை வெல்லப் போகிறதா ம.பி. அணி?

முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று கோப்பையை வெல்லும் நிலையில் உள்ளது மத்தியப் பிரதேச அணி. 

DIN

மும்பைக்கு எதிரான ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றில் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் நிலையில் உள்ளது மத்தியப் பிரதேச அணி. 

பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிச்சுற்றில் மும்பை - மத்தியப் பிரதேச அணிகள் மோதி வருகின்றன. மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 127.4 ஓவர்களில் 374 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜெயிஸ்வால் 78, சர்ஃபராஸ் கான் 134 ரன்கள் எடுத்தார்கள். கெளரவ் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2-ம் நாள் முடிவில் மத்தியப் பிரதேச அணி, 1 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது. யாஷ் டுபே 44, ஷுபம் சர்மா 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

யாஷ் டுபே - ஷுபம் சர்மாவின் அருமையான கூட்டணி இன்றும் தொடர்ந்தது. இருவரும் சதமடித்து ம.பி அணிக்குச் சாதகமான நிலையை உருவாக்கினார்கள். தொடக்க வீரர் யாஷ் டுபே 133, ஷுபம் சர்மா 116 ரன்கள் என இருவரும் சதமடித்து அசத்தினார்கள். இதனால் மும்பை அணி கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டது. இதன்பிறகு வந்த ரஜத் படிதார் 67 ரன்களும் கேப்டன் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.

3-ம் நாள் முடிவில் ம.பி. அணி 123 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 368 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் நிலையில் உள்ளது. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன. கூடுதலாக 7 ரன்கள் எடுத்தால் போதும், முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று விட முடியும். இதன்மூலம் ரஞ்சி கோப்பையை வெல்லும் கனவில் உள்ளது ம.பி. அணி. 41 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி, 2016-17-க்குப் பிறகு ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அடுத்த இரு நாள்களில் ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தி மும்பை அணியால் கோப்பை வெல்ல முடியுமா? என்ன நடக்கப் போகிறது, கடைசி இரு நாள்களில்?  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்! 7 பேர் பலி, 11 பேர் காயம்! | America

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT