கோப்புப் படம் 
செய்திகள்

டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் புதிய சாதனை

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்ஸர்கள் அடித்து சாதனைப் புரிந்துள்ளார். 

DIN

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்ஸர்கள் அடித்து சாதனைப் புரிந்துள்ளார். 

இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் இங்கிலாந்து அனியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது 100வது சிக்ஸரை அடித்து டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் 3வது வீரர் என்ற நிலையை அடைந்துள்ளார். 

முதல் இன்னிங்ஸில் நியிசிலாந்து அணி 329க்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 264 ரன்களை எடுத்துள்ளது. ஜானி பெயர்ஸ்டோ 130 ரன்களுடனும் ஜமியே ஓவர்டோன் 89 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். 

முதலிடம் பிடிக்க பென் ஸ்டோக்ஸிற்கு இன்னும் 7 சிக்ஸர்கள் தேவைப்படுகிறது. ஸ்டோல்ஸ் விரைவில் இச்சாதனைப் படைப்பாரென கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 

டெஸ்ட் போட்டிகளில் அதிகமான சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் : 

1. பிரண்டன் மெக்குல்லம் 107 
2. ஆடம் கில்கிரிஸ்ட்           100 
3. பென் ஸ்டோக்ஸ்              100 
4. கிரிஸ் கெயில்                  98
5. ஜேக் காலிஸ்                     97 
6. விரேந்தர் சேவாக்            88 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT