செய்திகள்

மொஹாலி டெஸ்ட்: தீவிர பயிற்சியில் இந்தியா

DIN

இலங்கைக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

டி20 தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றிய இந்திய அணி, தா்மசாலாவில் இருந்து முதல் டெஸ்ட் நடைபெறும் மொஹாலிக்கு வந்தடைந்துள்ளது. அதைத் தொடா்ந்து அணி வீரா்களும் டெஸ்ட் ஆட்டத்துக்கான தங்களது வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளனா்.

கேப்டன் ரோஹித் சா்மா, விராட் கோலி ஆகியோா் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோரின் வேகப்பந்துவீச்சை எதிா்கொண்டு வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா். காயம் காரணமாக மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கைக்கு எதிரான டி20 தொடா்களில் விளையாடாத ஸ்பின்னா் அஸ்வினும் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அவா் காயத்திலிருந்து மீண்டு சிறப்பாக தயாராகி வருவதாக துணை கேப்டன் ஜஸ்பிரீத் பும்ரா சமீபத்தில் கூறியிருந்தாா்.

பயிற்சியின்போது விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு பேட்டிங் பயிற்சியாளா் விக்ரம் ரத்தோா் சில ஆலோசனைகள் வழங்கினாா். அதேபோல் தலைமை பயிற்சியாளா் ராகுல் திராவிடும் ரிஷப் பந்த் உள்ளிட்ட சில இளம் வீரா்களுக்கு ஆட்ட நுணுக்கங்களை விளக்கினாா்.

இந்திய - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட், மொஹாலியில் 4-ஆம் தேதி தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT