ராட் மார்ஷ் (இடது) 
செய்திகள்

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ராட் மார்ஷ் மறைவு

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ராட் மார்ஷ் காலமானார். அவருக்கு வயது 74.

DIN

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ராட் மார்ஷ் காலமானார். அவருக்கு வயது 74.

ஆஸ்திரேலிய அணிக்காக 1970 முதல் 1984 வரை 96 டெஸ்டுகள், 92 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியவர் ராட் மார்ஷ். குயின்ஸ்லாந்தில் வசிந்து வந்த மார்ஷுக்குக் சில நாள்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக அடிலெய்ட் கொண்டுவரப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 

விக்கெட் கீப்பரான ராட் மார்ஷ், ஓய்வு பெற்றபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கீப்பிங் டிஸ்மிஸல்களைக் (355) கொண்டவர் என்கிற சாதனையைத் தன் வசம் வைத்திருந்தார். இடது கை பேட்டரான மார்ஷ், டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த முதல் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் என்கிற பெருமையை 1972-ல் அடைந்தார். 

கிரிக்கெட் நிர்வாகத்திலும் தனது திறமையை நிரூபித்தார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் அகாதெமிகளின் தலைவராக இருந்தார். கிரிக்கெட் வர்ணனையாளராகவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தேர்வுக்குழுத் தலைவராகவும் பணியாற்றினார். 

ராட் மார்ஷின் மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT