செய்திகள்

மே.இ. தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு

காயம் காரணமாக ஆலி ராபின்சன் முதல் டெஸ்டில் இடம்பெறவில்லை.

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 0-4 எனத் தோற்றது இங்கிலாந்து. அடுத்ததாக, நாளை (மார்ச் 8) முதல் மேற்கிந்தியத் தீவுகளில் 3 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. 

ஆன்டிகுவாவில் நடைபெறவுள்ள முதல் டெஸ்டுக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஆலி ராபின்சன் முதல் டெஸ்டில் இடம்பெறவில்லை. ஆண்டர்சன், பிராட் ஆகியோர் அணியில் இல்லாத நிலையில் ஆலி ராபின்சனும் காயமடைந்து முதல் டெஸ்டில் விளையாடாதது இங்கிலாந்து அணிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இத்தொடரில் இங்கிலாந்து அணியின் தற்காலிகப் பயிற்சியாளராக பால் கோலிங்வுட் பணியாற்றுகிறார். 

முதல் டெஸ்டுக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி

ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, ஸாக் கிராவ்லி, பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜேக் லீச், அலெக்ஸ் லீஸ், சகிப் முகமது, கிரைக் ஓவர்டன், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

SCROLL FOR NEXT