பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.
முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி, தனது 2-வது உலகக் கோப்பை ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. மவுண்ட் மாங்கனூயி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்தியாவுக்கு எதிராக மோசமாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் பேட்டர்கள், இன்றும் ரன்கள் எடுக்கத் திணறினார்கள். கேப்டன் பிஸ்மா மரூஃப் சிறப்பாக விளையாடி 122 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். கீழ்நடுவரிசை பேட்டர் அலியா ரியாஸ், 109 பந்துகள் எதிர்கொண்டு 53 ரன்கள் எடுத்தார். இதனால் 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் தான் எடுத்தது.
பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணி, 34.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. அலிஸா ஹீலி 72 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா தொடர்ச்சியாகப் பெறும் 12-வது வெற்றி இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.