முகப்பு
செய்திகள்

அஸ்வினுக்கு கபில் தேவ் அனுப்பிய அன்புப் பரிசு

டெஸ்ட் விக்கெட்டுகளில் தனது சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து இரு அன்புப் பரிசுகளை கபில் தேவ் அனுப்பியுள்ளாா்.

செய்திகள்

அஸ்வினுக்கு கபில் தேவ் அனுப்பிய அன்புப் பரிசு

டெஸ்ட் விக்கெட்டுகளில் தனது சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து இரு அன்புப் பரிசுகளை கபில் தேவ் அனுப்பியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

டெஸ்ட் விக்கெட்டுகளில் தனது சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து இரு அன்புப் பரிசுகளை கபில் தேவ் அனுப்பியுள்ளாா்.

இலங்கைக்கு எதிரான மொஹாலி டெஸ்டில் 6 விக்கெட்டுகள் சாய்த்த அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 435 விக்கெட்டுகளை எட்டியிருந்தாா். இதன் மூலம் கபில் தேவை (434) பின்னுக்குத் தள்ளி ‘டெஸ்டில் 2-ஆவது அதிகபட்ச விக்கெட்டுகள் சாய்த்த இந்தியா்’ என்ற சாதனையை படைத்தாா்.

இந்நிலையில், தன்னை முறியடித்த அஸ்வினை பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து பரிசு அனுப்பியுள்ளாா் கபில் தேவ். அவருக்கு பூங்கொத்து ஒன்றும், ‘எனது சாதனையை முறியடித்ததற்காக வாழ்த்துகள்’ என்று கைப்பட எழுதிய வாழ்த்து குறிப்பு ஒன்றும் அனுப்பியுள்ளாா் கபில் தேவ். பிசிசிஐ வெளியிட்ட விடியோ பதிவில் அஸ்வின் இந்தத் தகவலை தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →