வரவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கேப்டன் பொறுப்புச் சுமை இல்லாத, அழுத்தங்கள் இல்லாத விராட் கோலி எதிரணிக்கு அபாயகரமானவர் என கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கிளென் மேக்ஸ்வெல் கோலி குறித்து கூறியதாவது:
"விராட் கோலி இனிமேல் ஆக்ரோஷமான வீரர் கிடையாது. பெரிய சுமையாக இருந்த கேப்டன் பொறுப்பை ஒப்படைக்கிறோம் என அவருக்குத் தெரியும்.
கேப்டன் பொறுப்பிலிருந்த அழுத்தத்தை அவர் இறக்கிவைத்திருப்பது எதிரணிகளுக்கு அபாயகரமான செய்தி.
அழுத்தங்கள் இல்லாமல் இருப்பது அவருக்கு அற்புதமான ஒன்று. வெளியிலிருந்து எவ்வித அழுத்தங்களும் இல்லாமல், அடுத்த சில ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை அவர் அனுபவிக்கட்டும்."
கடந்த ஐபிஎல் சீசனிலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் பாப் டு பிளெஸ்ஸி தலைமையில் கோலி விளையாடவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.