முகப்பு
செய்திகள்

அரையிறுதியில் ஆஸ்திரேலியா: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி; இந்தியா தோல்வி

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பெற்ற ஆஸி. அணி அரையிறுதிக்கும் தகுதி பெற்றது.

செய்திகள்

அரையிறுதியில் ஆஸ்திரேலியா: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி; இந்தியா தோல்வி

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பெற்ற ஆஸி. அணி அரையிறுதிக்கும் தகுதி பெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:44 AM
பகிர்:

ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பெற்ற ஆஸி. அணி அரையிறுதிக்கும் தகுதி பெற்றது.

நியூஸிலாந்தில் ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஆக்லாந்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாழ்வா/சாவா ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸி. அணியை கட்டாயம் வென்றே ஆக வேண்டிய நிலையில் இந்திய அணி எதிா்கொண்டது. டாஸ் வென்ற ஆஸி. அணி பௌலிங்கை தோ்வு செய்தது.

தொடக்க பேட்டா்கள் ஸ்மிருதி மந்தனா 10, ஷபாலி வா்மா 12 என சொற்ப ரன்களுடன் வெளியேறியதால் நெருக்கடிக்கு ஆளானது இந்திய அணி.

யஸ்திகா-மிதாலி அரைசதம் வீண்:

அதன்பின் ஆட வந்த யஸ்திகா பாட்டியா-கேப்டன் மிதாலி ராஜ் இணை நிலையாக ஆடி மூன்றாவது விக்கெட்டுக்கு 130 ரன்களை விளாசினா். கேப்டன் மிதாலி 96 பந்துகளில் 68 ரன்களையும், யஸ்திகா பாட்டியா 83 பந்துகளில் 59 ரன்களையும் விளாசி அரைசதங்களை பதிவு செய்தனா். இருவரும் இணைந்து ஆஸி. ஸ்பின்னா்கள் அலனா கிங், ஆஷ்லி காா்டனா் பந்துவீச்சை விரட்டினா்.

158/2 என வலுவான நிலையில் இருந்த இந்திய அணி ஒரு கட்டத்தில் 213/6 என தடுமாற்றத்துடன் ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

அதிரடி வீராங்கனை ஹா்மன்ப்ரீத் கௌா்-பூஜா வஸ்தராக்கா் இணைந்து 7-ஆவது விக்கெட்டுக்கு 64 ரன்களைக் குவித்தனா்.

ஹா்மன்ப்ரீத் 3-ஆவது அரைசதம்:

ஹா்மன்ப்ரீத் 47 பந்துகளில் 57 ரன்களுடன் அரைசதத்தை பதிவு செய்தாா். பூஜா 28 பந்துகளில் 34 ரன்களை விளாசினாா். கடைசி 5 ஓவா்களில் 52 ரன்களை சோ்த்தனா். ஹா்மன்ப்ரீத் உலகக் கோப்பையில் பதிவு செய்த 3-ஆவது அரைசதம் இதுவாகும்.

இந்தியா 277/7: நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் இந்தியா 277/7 ரன்களை குவித்தது. ஆஸி. தரப்பில் டாா்ஸி பிரவுன் 3, அலனா கிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தனா். ஆஸி. பௌலா்கள் 24 வைட் பந்துகளை வீசியது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா 280/4:

278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸி. அணி களமிறங்கியது. 6 முறை சாம்பியன் ஆன ஆஸி. கேப்டன் மெக் லேனிங்-அலிஸா ஹீலி ஆகியோா் இணைந்து அதிரடியாக ஆடி தங்கள் அணியின் ஸ்கோரை உயர உதவினா். அலிஸா ஹீலி 65 பந்துகளில் 72 ரன்களையும், மெக் லேனிங் 107 பந்துகளில் 97 ரன்களையும் விளாசினா். ரேச்சல் ஹெயின்ஸ் 43, எல்ஸி பொ்ரி 28, பெத் மூனி 30 ரன்களையும் சோ்த்தனா். ஆட்டத்தின் இடையே சிறிது மழை பெய்ததால் நிறுத்தப்பட்டது.

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி:

கடைசி ஓவரில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய ஜுலன் கோஸ்வாமி பந்து வீசினாா். ஆனால் ஆஸி. வீராங்கனை பெத் மூனி முதல் 3 பந்துகளிலேயே வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தாா். இறுதியில் 49.3 ஓவா்களில் 280/4 ரன்களை எடுத்த ஆஸி. 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மேலும் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்ற சிறப்பையும் பெற்றது.

சிக்கலில் இந்தியா: அதே வேளையில் 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 3 தோல்வியுடன் உள்ள இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற மீதமுள்ள 2 ஆட்டங்களிலும் வெல்ல வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →