செய்திகள்

நூலி​ழையி‌ல் நழு​விய வா‌ய்‌ப்பு: வெளி​யே​றி​யது இ‌ந்​தியா

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கடைசி லீக் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியைத் தழுவியது. 

DIN

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கடைசி லீக் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியைத் தழுவியது. 

இதனால், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து, போட்டியிலிருந்து வெளியேறியது இந்தியா. இந்தியா, 7 ஆட்டங்களில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 5-ஆம் இடம் பிடித்தது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதியில் ஆடவுள்ளன. 

வென்றே தீர வேண்டிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. அடுத்து தென்னாப்பிரிக்கா அதே ஓவர்களில் அதே 7 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் அடித்து வென்றது. 

இந்திய அணியின் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா 71, கேப்டன் மிதாலி ராஜ் 68, ஷஃபாலி வர்மா 53, ஹர்மன்பிரீத் கெüர் 48 ரன்கள் விளாசி அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தனர். தென்னாப்பிரிக்க பெüலிங்கில் ஷப்னிம் இஸ்மாயில், மசாபடா கிளாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். 

பின்னர் தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் லெüரா வோல்வார்டட் 80, லாரா குட்டால் 49 ரன்கள் அடித்து உதவ, இறுதி வரை ஆட்டமிழக்காத மிக்னான் டு பிரீஸ் 52 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழி நடத்தினார். பெüலிங், ஃபீல்டிங்கில் தடுமாறிய இந்திய அணியில் ராஜேஷ்வரி கெய்க்வாட், ஹர்மன்பிரீத் கெüர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். 

தலைகீழ் மாற்றம்: ஆட்டத்தின் கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு 7 ரன்கள் தேவை இருந்தது. அதில் தீப்தி சர்மா வீசிய 2-ஆவது பந்தில் திரிஷா ஷெட்டி ஆட்டமிழக்க, 5-ஆவது பந்தில் மிக்னான் அவுட்டானார். துரதிருஷ்டவசமாக அந்தப் பந்து "நோ பால்' ஆனதால், மிக்னான் கண்டம் தப்பியதுடன் தென்னாப்பிரிக்காவுக்கு கூடுதல் பந்தும், 1 ரன்னும் கிடைத்தது. இதனால் 2 பந்துகளில் 2 ரன்களே தேவை இருக்க, மிக்னான் ஆட்டத்தை முடித்து வைத்தார். 

இங்கிலாந்து வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் வங்கதேசத்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துகொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஷ்ணு விஷாலின் ஆர்யன் வெளியீட்டுத் தேதி!

திமுக ஆட்சியில் தொடர்ந்து குறையும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: அண்ணாமலை குற்றச்சாட்டு

“Vijay குறித்து என்னிடம் கேட்க வேண்டாம்!”: Premalatha Vijayakanth | செய்திகள்: சில வரிகளில் | 29.8.25

பந்தன் வங்கிக்கு ரூ.44.70 லட்சம் அபராதம் விதிப்பு: ரிசர்வ் வங்கி

கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவையின் பாதுகாப்பு ரத்து! டிரம்ப் உத்தரவு!

SCROLL FOR NEXT