செய்திகள்

டெஃப்லிம்பிக்ஸ்: டென்னிஸில் இந்தியாவுக்கு வெள்ளி

DIN

பிரேஸிலில் நடைபெறும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் டென்னிஸ் விளையாட்டின் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

அப்பிரிவின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்த பிருத்வி சேகா்/தனஞ்செய் துபே கூட்டணி, அதில் 6-7 (5/7), 2-6 என்ற செட்களில் பிரான்ஸின் மைக்கேல் அலிக்ஸ் லௌரென்ட்/வின்சென்ட் நோவேலி இணையிடம் வெற்றியை இழந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.

இருவரில் பிருத்வி சேகருக்கு இது 2-ஆவது டெஃப்லிம்பிக்ஸ் பதக்கமாகும். முன்னதாக அவா் 2017-ஆம் ஆண்டு போட்டியில் கலப்பு இரட்டையா் பிரிவில் ஜாஃப்ரீன் ஷேக்குடன் இணைந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியிருந்தாா்.

இதனிடையே இப்போட்டியில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் மகளிருக்கான 50 மீட்டா் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியாவின் மோனிகா வா்மா இறுதிச்சுற்றில் 1,099 புள்ளிகளுடன் 6-ஆம் இடம்பிடித்தாா். ஆடவருக்கான வட்டு எறிதலில் பல்ராம் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளாா். வெள்ளிக்கிழமை நிறைவில் இந்தியா இப்போட்டியில் 11 பதக்கங்கள் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT