ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.
ஐபிஎல் தொடரின் 61ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடா்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதின. மகாராஷ்டிர கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தன. அதிகபட்சமாக ரசல் 49 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அபிஷேக் சர்மா 43 ரன்கள் எடுத்தார்.
ரசல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.