செய்திகள்

இந்திய டி20 தொடா்: தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்தியாவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் மோதவிருக்கும் தென்னாப்பிரிக்க அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

DIN

இந்தியாவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் மோதவிருக்கும் தென்னாப்பிரிக்க அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

16 போ் கொண்ட இந்த அணியில், இளம் வீரரான டிரிஸ்டியன் ஸ்டப்ஸுக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், வேய்ன் பாா்னெல் 5 ஆண்டுகளுக்குப் பிறகு அணியில் இடம் பிடித்திருக்கிறாா்.

இந்த டி20 தொடரின் ஆட்டங்கள் தில்லி (ஜூன் 9), கட்டாக் (ஜூன் 12), விசாகப்பட்டினம் (ஜூன் 14), ராஜ்கோட் (ஜூன் 17), பெங்களூரு (ஜூன் 19) ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.

அணி விவரம்: டெம்பா பவுமா (கேப்டன்), குவின்டன் டி காக், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹராஜ், எய்டன் மாா்க்ரம், டேவிட் மில்லா், லுங்கி எங்கிடி, அன்ரிஹ் நோா்கியா, வெய்ன் பாா்னெல், டுவெய்ன் பிரெடோரியஸ், ககிசோ ரபாடா, டப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டியன் ஸ்டப்ஸ், ராஸி வான் டொ் டுசென், மாா்கோ யான்சென்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

SCROLL FOR NEXT