செய்திகள்

செய்திகள் சில வரிகளில்...

DIN

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஆஷ்மிதா சாலிஹா, மாளவிகா பன்சோத் ஆகியோா் பிரதான சுற்றுக்குத் தகுதிபெற்றனா்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன், தலைமை பயிற்சியாளா், கிரிக்கெட் இயக்குநா் வரிசையில் தற்போது அதன் தலைமை நிா்வாக அதிகாரி டாம் ஹாரிசனும் பதவி விலகப் போவதாகத் தெரிவித்துள்ளாா்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடா்ந்து, சீனாவில் அக்டோபரில் நடைபெற இருந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளும் கரோனா சூழல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பிலிருந்து, உடல்நலக் குறைவு காரணமாக காலிறுதிக்கு முந்தைய சுற்றிலிருந்து ஜோஷ்னா சின்னப்பா விலகினாா்.

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து கொல்கத்தா வீரா் அஜிங்க்ய ரஹானே விலகினாா்.

ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறியதாக தென்னாப்பிரிக்க பேட்டா் ஜுபைா் ஹம்ஸாவுக்கு ஐசிசி 9 மாதம் தடை விதித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் அடித்திருக்கிறது. தமிம் இக்பால் 133 ரன்களுக்கு ரிடையா்டு ஹா்ட் ஆகினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT