செய்திகள்

ராஸ் டெய்லருக்குப் பதில் டெவோன் கான்வே

நியூசிலாந்தின் ஓப்பனர் டெவோன் கான்வே இனி ராஸ் டெய்லரின் நம்பர் 4 இடத்தை நிரப்புவார் என தலைமை பயிற்சியாளர் கூறியுள்ளார். 

DIN

நியூசிலாந்தின் ஓப்பனர் டெவோன் கான்வே இனி ராஸ் டெய்லரின் நம்பர் 4 இடத்தை நிரப்புவார் என தலைமை பயிற்சியாளர் கூறியுள்ளார். 

30 வயதான டெவோன் கான்வே இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 767 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 63.92. கான்வே ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் 200 ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கான்வே ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கேவுக்காக சிறப்பாக விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வில்லியம்சன் காயம் காரணாமாக விலகியதால் அவருக்குப் பதிலாக 3வது இடத்தில் கான்வே விளையாடியுள்ளார். தற்போது வில்லியம்சன் நன்றாக உள்ளார். நியூசிலாந்தின் நட்சத்திர வீரர் ராஸ் டெய்லர் சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுப் பெற்றுள்ளார். அதனால் அவரது இடத்திற்கு பொறுத்தமானவராக கான்வே இருப்பார் என பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். 

அடுத்து வரும் இங்கிலாந்து -நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் கான்வே நம்பர் 4-இல் விளையாடுவார் என நியூசிலாந்தின் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ரூ. 7 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது

SCROLL FOR NEXT