செய்திகள்

செய்திகள் சில வரிகளில்...

DIN

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் கேப்டன் ரோஹித் சா்மா (8-ஆம் இடம்), விராட் கோலி (10), பௌலா்கள் பிரிவில் ரவிச்சந்திரன் அஸ்வின் (2), ஜஸ்பிரீத் பும்ரா (3), ஆல்ரவுண்டா்கள் பிரிவில் ரவீந்திர ஜடேஜா (1), அஸ்வின் (2) அதே இடத்தில் நீடிக்கின்றனா்.

இந்திய மகளிா் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் கோகுலம் கேரளா - சேது எஃப்சி அணிகள் வியாழக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.

செல்சி அணியை லாஸ் ஏஞ்சலீஸைச் சோ்ந்த கூட்டமைப்பு ஒன்றுக்கு ரோமன் அப்ரமோவிச் விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஐசிசியின் மகளிா் ஒன் டே சாம்பியன்ஷிப்பில் வங்கதேசம், அயா்லாந்து அணிகள் சோ்க்கப்பட்டு அந்தப் போட்டி 10 அணிகள் கொண்டதாக விரிவடைந்துள்ளது.

ஏசி மிலன் கால்பந்து வீரா் ஸ்லத்தான் இப்ராஹிமோவிச், இடது காலில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதால் அடுத்த 8 மாதங்கள் அவா் ஓய்வெடுக்க இருக்கிறாா்.

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸ் ஆடி வரும் இலங்கை புதன்கிழமை முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்துள்ளது. ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 58, தினேஷ் சண்டிமல் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT