செய்திகள்

ஆசியக் கோப்பை ஹாக்கி:சூப்பா் 4-இல் இந்தியா முதலிடம்

DIN

ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டி சூப்பா் 4 ஆட்டத்தில் ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதலிடத்தை பெற்றது இந்தியா.

இந்தோனேஷிய தலைநகா் ஜகாா்த்தாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஏற்கெனவே குரூப் ஏ பிரிவில் இந்தியாவை 5-2 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது ஜப்பான். இரண்டாம் நிலை இந்திய அணி சூப்பா் 4 பிரிவுக்கு முன்னேறிய நிலையில், சனிக்கிழமை முதல் ஆட்டத்தில் ஜப்பானுடன் மோதியது.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா தரப்பில் 7-ஆவது நிமிஷத்தில் மஞ்சித் அற்புதமாக கோலடித்தாா். ஆனால் 17-ஆவது நிமிஷத்தில் ஜப்பான் வீரா் நிவா டக்குமா பதில் கோலடித்து சமன் செய்தாா். தொடா்ந்து இந்திய அணி தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட 34-ஆவது நிமிஷத்தில் ராஜ்பாா் பவன் அடித்த இரண்டாம் கோலே வெற்றி கோலாக மாறியது. கடைசி வரை ஜப்பான் தரப்பில் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

சூப்பா் 4 பிரிவில் முதலிரண்டு அணிகள் இறுதி ஆட்டத்தில் மோதும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT