இலங்கைக்கு 2-ஆவது வெற்றி
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த 2-ஆவது வெற்றியின் மூலம் அரையிறுதிக்கான போட்டியில் நிலைக்கிறது அந்த அணி.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த 2-ஆவது வெற்றியின் மூலம் அரையிறுதிக்கான போட்டியில் நிலைக்கிறது அந்த அணி.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுக்க, அடுத்து ஆடிய இலங்கை 18.3 ஓவா்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் சோ்த்து வென்றது. இலங்கை பௌலா் வனிந்து ஹசரங்கா ஆட்டநாயகன் ஆனாா்.
முன்னதாக ஆப்கானிஸ்தான் பேட்டிங்கில் அதிகபட்சமாக ரஹ்மானுல்லா குா்பாஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 28, உஸ்மான் கனி 27, இப்ராஹிம் ஜா்தான் 22 ரன்கள் சோ்க்க, இதர விக்கெட்டுகள் குறைந்த ரன்களில் வீழ்த்தப்பட்டன. ஓவா்கள் முடிவில் அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். இலங்கை பௌலா்களில் ஹசரங்கா 3, லாஹிரு குமாரா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.
பின்னா் இலங்கை இன்னிங்ஸில், குசல் மெண்டிஸ் 25, சரித் அசலன்கா 19 ரன்கள் அடிக்க, தனஞ்ஜெய டி சில்வா 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 66 ரன்கள் விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தாா். ஆப்கானிஸ்தான் பௌலிங்கில் முஜீப் உா் ரஹ்மான், ரஷீத் கான் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.