செய்திகள்

தினேஷ் கார்த்திக் நாளை விளையாடுவாரா?: டிராவிட் பதில்

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் விளையாடுவது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார்.

DIN

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் விளையாடுவது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தோல்வியடைந்த இந்திய அணி நாளை நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தெ.ஆ. இன்னிங்ஸின்போது அவர் ஓய்வறைக்குத் திரும்பினார். மீதமுள்ள ஓவர்களில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராகச் செயல்பட்டார். இதனால் உலகக் கோப்பைப் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களில் தினேஷ் கார்த்திக் விளையாடுவாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். 

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் விளையாடுவது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இன்று கூறியதாவது:

தினேஷ் கார்த்திக் காயத்திலிருந்து குணமாகி வருகிறார். பயிற்சியில் இன்று பங்கேற்றார். நாளை காலை அவர் விளையாடுவது குறித்து முடிவெடுக்கப்படும். கடினமான சூழல்களில் பேட்டிங் செய்யும் பொறுப்பில் உள்ளார் தினேஷ் கார்த்திக். எனவே அவரைப் போன்றவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

SCROLL FOR NEXT