செய்திகள்

முதல் ஒருநாள் விக்கெட்டை எடுத்த ஆஸி. வீரர் காலமானார்

பாய்காட்டின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தின் முதல் விக்கெட்டையும் ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் விக்கெட்டையும்...

DIN


ஆலன் தாம்சன், ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் விக்கெட் எடுத்தவர். 76 வயதில் காலமாகியுள்ளார்.

4 டெஸ்டுகளிலும் ஒரே ஒரு ஒருநாள் ஆட்டத்திலும் விளையாடிய ஆஸி. வீரர் தாம்சன், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே ஒரு விக்கெட் எடுத்து வரலாற்றில் இடம்பிடித்தார். 

1970-71-ல் 7 டெஸ்டுகள் கொண்ட ஆஷஸ் தொடரில் முதலில் இரு டெஸ்டுகளிலும் பிறகு 5 மற்றும் 6-வது டெஸ்டுகளிலும் விளையாடினார். 

அத்தொடரில் 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாகக் கைவிடப்பட்டது. இதனால் ஜனவரி 5 அன்று அதே மெல்போர்னில் ஒருநாள் ஆட்டம் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அதுவே உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம். அதில் பாய்காட்டின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தின் முதல் விக்கெட்டையும் ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் விக்கெட்டையும் வீழ்த்தினார் தாம்சன். இதனால் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்தார். 40 ஓவர்களாக நடத்தப்பட்ட அந்த ஆட்டத்தில் 8 ஓவர்களில் வீசி 1 விக்கெட்டுடன் 22 ரன்கள் கொடுத்தார் தாம்சன். அதன்பிறகு அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடவே இல்லை. முதல்தர கிரிக்கெட்டில் 44 ஆட்டங்களில் 184 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் வளர்ச்சி கண்ட வ.உ.சி. துறைமுகம்

திருப்பராய்த்துறை கோயிலில் நாளை குடமுழுக்கு

தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது

இடம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: ஓம்கார குடிலைச் சோ்ந்த இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT