கோப்புப் படம் (தனுஷ்கா குணதிலகா) 
செய்திகள்

பாலியல் புகாரில் கைதான இலங்கை வீரர்!

பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில் பிரபல இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். 

DIN

டி20 உலகக் கோப்பையின் முதல் சுற்றின் போது குணதிலகா தொடையில் ஏற்பட்ட காயத்தால் வெளியேறினார். அவர் அணியில் மாற்றப்பட்டார் ஆனால் ஆஸ்திரேலியாவில் அணியில் இருந்தார். அவர் நவம்பர் 2015இல் தனது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்து இலங்கைக்காக 8 டெஸ்ட், 47 ஒருநாள் மற்றும் 46 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

நேற்று (நவ.5) நடைபெற்ற முக்கியமான போட்டியில் இங்கிலாந்திடம் தோற்ற இலங்கை அணி உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. 

"ஆன்லைன் டேட்டிங் செயலியின் மூலம் பல நாட்கள் அவருடன் தொடர்பு கொண்ட பிறகு அந்தப் பெண் அவரைச் சந்தித்துள்ளார். பின்னர் அவர் 2 நவம்பர் புதன்கிழமை மாலை அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. நடந்து வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, ரோஸ் பேவில் உள்ள முகவரியில் நேற்று சிறப்பு காவல்துறையினரால் குற்றச் சம்பவங்கள் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது." என நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

“சிட்னியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  குணதிலகா நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் ஐசிசியால் அறிவிக்கப்பட்டதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் உறுதிப்படுத்துகிறது.

நீதிமன்றத்தில் நடக்கும் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து, ஐசிசியுடன் கலந்தாலோசித்து, இந்த விஷயத்தில் ஒரு முழுமையான விசாரணையை விரைவாகத் தொடங்குவார் மற்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என இலங்கை கிரிக்கெட் நிர்வாகமும் உறுதி செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஷ்மீரின் குரல்! ஃபரூக் அப்துல்லாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்...

சென்னை, புறநகரில் பரவலாக கனமழை!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

வெள்ளி வெறும் ஆபரணமல்ல! விலை உயர்வின் பின்னணி!

SCROLL FOR NEXT