செய்திகள்

இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டிக்கு தேர்வாகும்: முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் 

DIN

டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டிக்கு தேர்வாகுமென முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கூறியுள்ளார். 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப் 2 பிரிவில் முதல் இடம் பிடித்து அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது இந்திய அணி. அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. புதன் அன்று சிட்னியில் நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. வியாழன் அன்று அடிலெய்டில் நடைபெறவுள்ள 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. 

இந்த டி20 உலகக்கோப்பை குறித்து முன்னாள் தென்னாப்பிரிக்க வீரரிடம் (ஏபிடி வில்லியர்ஸ்) கேள்வி கேட்கப்பட்டபோது அவர் கூறியதாவது: இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டியில் விளையாடும். அதில் இந்திய அணி வெல்லும். சூர்யகுமார் யாதவ், விராட் கோலி சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த அணியும் மிகவும் திறமைசாலியானவர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT