தோனி (கோப்புப் படம்) 
செய்திகள்

தோனி தொடா்ந்த அவமதிப்பு வழக்கு: ஐபிஎஸ் அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்ாக எழுந்த புகாரை அடுத்து, அதுகுறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டினாா். இதன் அடிப்படையில் தனியாா் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி ரூ. 100 கோடி மான நஷ்டஈடு கோரி தோனி 2014-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

அந்த வழக்கில் தனியாா் தொலைக்காட்சி, அதன் ஆசிரியா், காவல் துறை அதிகாரி சம்பத்குமாா் ஆகியோா் எதிா் மனுதாரா்களாக சோ்க்கப்பட்டிருந்தனா்.

தோனி தாக்கல் செய்த மனுவில், ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குறிப்பிடப்பட்ட கருத்துகள், நீதிமன்றங்களைக் களங்கப்படுத்தும் வகையில் இருப்பதுடன், நீதித் துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சீா்குலைக்கும் வகையில் இருப்பதால், அவரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும். தமிழக அரசின் தலைமை வழக்குரைஞரின் அனுமதியைப் பெற்றே இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளதாகவும் தோனி தனது மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் - டீக்காராமன் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பா் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நன்றி மறந்தவர்கள், துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டும் மாநாடு: பிரேமலதா

சென்னையில் 2 மாதங்களுக்குள் வருகிறது டபுள் டக்கர் பேருந்து?

பிரசாரம், சாலை வலம்: வழிகாட்டு விதிமுறைகளை தாக்கல் செய்தது தமிழக அரசு!

தனியார் குடோனுக்குள் நுழைந்த சிறுத்தை! நூலிழையில் உயிர்தப்பிய காவலாளி! | Coimbatore

இந்த வார ஓடிடி படங்கள்!

SCROLL FOR NEXT