செய்திகள்

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து சாம்பியன்ஸ்!

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது.

DIN

டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து கோப்பையை வென்றது.

டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது இங்கிலாந்து. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினர். இந்தியாவுடனானப் போட்டியில் அதிரடியாக விளையாடிய அலெக்ஸ் ஹேல்ஸ் ஷகீன் அப்ரிடி பந்து வீச்சில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பில் சால்ட் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், கேப்டன் ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடினார். அவர் 17 பந்துகளில் 26 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ப்ரூக் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடியது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு குறைந்த ரன்களே தேவைப்பட்டதால் பேட்ஸ்மேன்கள் பெரிய  ஷாட்களுக்கு முயன்று விக்கெட்டுகளை பறிகொடுக்கவில்லை. ப்ரூக் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டோக்ஸ் மற்றும் மொயீன் அலி இங்கிலாந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 49 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கும்.

2009-க்குப் பிறகு இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

பாகிஸ்தான் பருமழைக்கு 302 பேர் பலி, 727 பேர் காயம்!

பாஜக கூட்டணி எம். பி. க்கள் கூட்டத்தில் பிரதமரை வாழ்த்தி ஹர ஹர மகாதேவ் கோஷம்!

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

SCROLL FOR NEXT