செய்திகள்

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹாட்ரிக்: டிம் சௌதி சாதனை

இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

DIN

இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி இன்று (நவம்பர் 20) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. 

இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக இன்னிங்ஸின் கடைசி ஓவரை வீசினார் டிம் சௌதி. அவரது அந்த ஓவரில் தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவர் தனது கடைசி ஓவரில் இந்திய அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா, தீபக் ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார்.

4 ஓவர்களை வீசிய டிம் சௌதி 34 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சர்வதேச டி20 போட்டிகளில் டிம் சௌதி எடுத்த 2ஆவது ஹாட்ரிக் இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் அவர் கடைசியாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 உயர்வு!

இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்!

யுஜிசியின் புதிய விதிமுறைகள் சாதியப் பாகுபாட்டை ஒழிக்கும்! முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

கொலம்பியாவில் விமான விபத்து! எம்.பி. உள்பட 15 பேர் பலி!

பாராமதியில் அஜீத் பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு! ஏற்பாடுகள் தீவிரம்!

SCROLL FOR NEXT