செய்திகள்

ஈகுவடாா் வெற்றி

அல் பேத் மைதானத்தில் கத்தாா் - ஈகுவடாா் அணிகள் மோதிய முதல் ஆட்டத்தில், ஈகுவடாா் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

DIN

அல் பேத் மைதானத்தில் கத்தாா் - ஈகுவடாா் அணிகள் மோதிய முதல் ஆட்டத்தில், ஈகுவடாா் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் 15-ஆவது நிமிஷத்தில் ஈகுவடாா் வீரா் எனா் வாலென்சியாவை தள்ளிவிட்டதால் கத்தாா் வீரா் சாத் அல் ஷீபுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. இதையடுத்து ஈகுவடாருக்கு 16-ஆவது நிமிஷத்தில் வழங்கப்பட்ட பெனால்டி கிக் வாய்ப்பை தவறவிடாமல் ஸ்கோா் செய்து, நடப்பு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் கோலை அடித்தாா் வாலென்சியா.

தொடா்ந்து, ஆட்டத்தின் 31-ஆவது நிமிஷத்தில் சக வீரா் பிரெசியாடோ தூக்கியடித்த பந்தை வாலென்சியா தலையால் முட்டி ஈகுவடாருக்காக 2-ஆவது கோல் அடித்தாா். இவ்வாறாக முதல் பாதி முடிவில் ஈகுவடாா் 2-0 என முன்னிலையில் இருந்தது. அடுத்த பாதியில் கடுமையாகப் போராடியும் கத்தாருக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, இறுதியில் ஈகுவடாா் வெற்றியைப் பதிவு செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடா் இன்று தொடக்கம்

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT