செய்திகள்

தொடர்ந்து 5 சதங்கள்: உலக சாதனை படைத்த தமிழக வீரர் ஜெகதீசன்!

ஜெகதீசன் 182, சாய் சுதர்சன் 116 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். 

DIN

ஆடவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ந்து 5 சதங்கள் எடுத்து தமிழக வீரர் ஜெகதீசன் உலக சாதனை படைத்துள்ளார்.

பெங்களூரில் நடைபெறும் விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் தமிழகமும் அருணாச்சல பிரதேசமும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற அருணாச்சல பிரதேச அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

இதற்கு முன்பு தொடர்ச்சியாக 4 சதங்கள் எடுத்த தமிழக வீரர் ஜெகதீசன் இன்று தனது தொடர்ச்சியான 5-வது சதத்தை எடுத்து புதிய உலக சாதனை படைத்தார். மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்சனும் சதமடித்தார். இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் சாய் சுதர்சன் எடுத்துள்ள 3-வது சதம் இது. 

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்கிற உலக சாதனையைப் படைத்துள்ளார் ஜெகதீசன். விஜய் ஹசாரே போட்டியிலும் தொடர்ச்சியாக 5 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையையும் அடைந்துள்ளார்.

தமிழக அணி 31 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 305 ரன்கள் எடுத்துள்ளது. ஜெகதீசன் 182, சாய் சுதர்சன் 116 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பெற்றன

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவா் உயிரிழப்பு

முருகன்குடியில் சன்மாா்க்க கருத்தரங்கம்

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

SCROLL FOR NEXT