முகப்பு
செய்திகள்

உலகக் கோப்பை: ஆர்ஜென்டீனாவை வீழ்த்திய சவூதி அரேபியா!

ஆர்ஜென்டீனாவை 2-1 எனத் தோற்கடித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது சவூதி அரேபியா. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:54 AM
பகிர்:

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ஆர்ஜென்டீனாவை 2-1 எனத் தோற்கடித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது சவூதி அரேபியா. 

கத்தாரில் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. ஆர்ஜென்டீனா - சவூதி அரேபியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று நடைபெற்றது. 

முதல் 10 நிமிடத்துக்குள் பெனால்டி மூலமாக கோல் அடித்தார் பிரபல நட்சத்திரம் மெஸ்ஸி. இதனால் ஆர்ஜென்டீனா என 1-0 என முன்னிலை பெற்றது. நான்கு உலகக் கோப்பைப் போட்டிகளிலும் கோலடித்த முதல் ஆர்ஜென்டீனா வீரர்  என்கிற பெருமையை மெஸ்ஸி பெற்றார் மெஸ்ஸி. முதல் பாதி முடிவில் 1-0 என முன்னிலையில் இருந்தது ஆர்ஜென்டீனா. 

2-வது பாதியில் நிலைமை மாறியது. 8-வது நிமிடத்தில் சவூதி அரேபியா கோலடித்து சமன் செய்தது. ஷெரி கோலடித்தார்.  53-வது நிமிடத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் சலீம் அல் டாசாரி கோல் அடித்து சவூதி அரேபியா 2-1 என முன்னிலை பெற உதவினார். கடைசியில் கோலடிக்க மிகவும் முயற்சி செய்தது ஆர்ஜென்டீனா. இறுதியில் 2-1 என உலகின் 3-வது சிறந்த அணியான ஆர்ஜென்டினாவை வென்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது தரவரிசையில் 51-வது இடத்தில் உள்ள சவூதி அரேபிய அணி.

முழு கட்டுரையைப் படிக்க →