ஜோகோவிச் (கோப்புப்படம்) 
செய்திகள்

ஜோகோவிச் சாதனை சாம்பியன்

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் ஆனார். 

DIN

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் ஆனார். 

இறுதிச்சுற்றில் அவர் 7-5, 6-3 என்ற செட்களில் நார்வேயின் கேஸ்பர் ரூடை தோற்கடித்தார். இப்போட்டியில் அவர் 2015-க்குப் பிறகு சாம்பியன் ஆவது இதுவே முதல் முறையாகும். இப்போட்டியில் சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6 முறை சாம்பியன் ஆனதே அதிகபட்சமாக இருக்கும் நிலையில், தற்போது ஜோகோவிச்சும் அதே எண்ணிக்கையிலான பட்டங்களை வென்று அவரது சாதனையை சமன் செய்திருக்கிறார். 

மேலும், இந்தப் பட்டத்தை வெல்லும் மிக வயதான வீரர் (35) என்ற பெருமையையும் பெற்ற அவர், ரொக்கப் பரிசாக ரூ.38 கோடியை கைப்பற்றியுள்ளார். இந்தப் போட்டி முழுவதுமாக அவர் ஒரு தோல்வியைக் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இத்துடன் நடப்பு ஆண்டை, விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் உள்பட 5 சாம்பியன் பட்டங்களுடன் ஜோகோவிச் நிறைவு செய்திருக்கிறார்.

இரட்டையர்: இப்போட்டியின் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் ராஜீவ் ராம்/இங்கிலாந்தின் ஜேக் சாலிஸ்பரி கூட்டணி 7-6 (7/4), 6-4 என குரோஷியாவின் மேட் பாவிச்/நிகோலா மெக்டிச் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இத்தனை கணவர்களா? கவனம் ஈர்க்கும் நிகிலா விமலின் பெண்ணு கேஸ் டீசர்!

‘கூட்ட அறிவியல்’ கொஞ்சமாவது கற்கனும்!

தவெக விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடையாக இல்லை: கரூரில் தொல். திருமாவளவன் பேட்டி

மைலாஞ்சி இசை, டீசர் வெளியீடு!

ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும்: அட்லி

SCROLL FOR NEXT