முகப்பு
செய்திகள்

கால்பந்து உலகக் கோப்பை: பெல்ஜியம் அணி வெற்றி! 

கால்பந்து உலகக் கோப்பை லீக் போட்டியில் கனடாவை வீழ்த்தியது பெல்ஜியம் அணி. 

Updated On : 24 நவம்பர், 2022 at 2:43 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:26 PM

2022 கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. லீக் சுற்றில் 12 நாள்களுக்குத் தினமும் நான்கு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிந்து களமிறங்குகின்றன. தற்போது குரூப் எஃப் பிரிவில் பெல்ஜியம் மற்றும் கனடா அணிகள் மோதியது. 

முதல் பாதி நேர ஆட்டத்தின் கடைசியில் 44வது நிமிடத்தில் பெல்ஜியம் 1 கோல் அடித்தது. இரண்டாம் பாதி முழுவதும் கனடா அணியினால் ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை. அதனால் பெல்ஜியம் அணி முதல் போட்டியில் 1-0 என வெற்றியுடன் லீக் போட்டியை தொடங்கியுள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.