முகப்பு
செய்திகள்

கோஸ்டா ரிகாவை புரட்டியது ஸ்பெயின் (7-0)

குரூப் இ பிரிவில் கத்துக்குட்டி அணியான கோஸ்டா ரிகாவை 7}0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது முன்னாள் உலக சாம்பியன் ஸ்பெயின்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:56 AM
பகிர்:

குரூப் இ பிரிவில் கத்துக்குட்டி அணியான கோஸ்டா ரிகாவை 7}0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது முன்னாள் உலக சாம்பியன் ஸ்பெயின்.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அல் தும்மமா மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
கடந்த 2010}ஆம் ஆண்டு உலக சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணி முற்றிலும் இளம் வீரர்களை கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. 18, 19 வயதே நிறைந்த வீரர்கள் கொண்ட ஸ்பெயின் அணி தொடக்கம் முதலே துடிப்புடன் ஆடியது.  முதல் பாதியிலேயே டேனி ஒல்மோ (11), மார்கோ அசென்ஸியோ (21), பெர்ரன் டோரஸ் (31) நிமிஷங்களில் கோலடித்தனர். இதன் மூலம் முதல் பாதி முடிவில் 3}0 என முன்னிலை பெற்றிருந்தது ஸ்பெயின். கோஸ்டா ரிகா வீரர்களால் ஸ்பெயின் தற்காப்பு அரணை ஊடுருவிச் செல்ல முடியவில்லை. 
82 சதவீதம் பந்து ஸ்பெயின் வசமே இருந்தது. 
இரண்டாம் பாதியிலும் ஸ்பெயினே ஆதிக்கம் செலுத்தியது. பெர்ரன் டோரஸ் 54, ஜேவி 74, கால்லோஸ் சோலர் 90 ஆவது நிமிஷங்களில் கோலடித்தனர். அல்வாரோ மொரட்டா கூடுதல் நேரத்தில் கோலடிக்க ஸ்பெயின் 7}0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் குரூப் இ பிரிவில் ஸ்பெயின், ஜப்பான் தலா 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளன.  டேனி ஓல்மோ அடித்த கோல் உலகக் கோப்பையில் ஸ்பெயினின் 100}ஆவது கோலாக அமைந்தது.
மேலும் முதன்முதலாக உலகக் கோப்பையில் 7 கோல்களை அடித்துள்ளது.  1958-இல் பிரேஸில் வீரர் பிலே தான் கோலடித்த இளம் வீரர் என்ற சிறப்பைப் பெற்றிருந்தார். தற்போது ஜேவி உலகக் கோப்பையில் கோலடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 
கடந்த 2018 உலகக் கோப்பையில் ரவுண்ட் 16 சுற்றை தாண்டவில்லை ஸ்பெயின். கடந்த 2012-இல் கடைசியாக யூரோ பட்டத்தை வென்றிருந்தது ஸ்பெயின்.

முழு கட்டுரையைப் படிக்க →