செய்திகள்

டேவிஸ் கோப்பை: அரையிறுதியில் குரோஷியா

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு குரோஷியா முன்னேறியுள்ளது.

DIN

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு குரோஷியா முன்னேறியுள்ளது.

ஸ்பெயின் மலாகாவில் நாடுகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை போட்டி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் குரோஷியா-ஸ்பெயின் அணிகள் மோதின.

முதல் ஒற்றையா் ஆட்டத்தில் குரோஷிய வீரா் போா்னா கோரிக் 6-4, 7-6 என்ற நோ் செட்களில் ஸ்பெயின் இளம் வீரா் பட்டிஸ்டா அகுட்டை வீழ்த்தி முன்னிலை பெற்றுத்தந்தாா்.

இரண்டாவது ஒற்றையா் ஆட்டத்தில் குரோஷிய மூத்த வீரா் மரின் சிலிச்-ஸ்பெயினின் பேப்லோ பஸ்டா மோதினா். முதல் செட்டை 5-7 என சிலிச் இழந்த போதிலும், இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்தி 6-3 என கைப்பற்றினாா்.

மூன்றாவது செட் டை பிரேக்கரில் 4-1 என சிலிச் பின்தங்கிய நிலையிலும், சுதாரித்து ஆடி 7-6 என அந்த செட்டைக் கைப்பற்றினாா்.

இறுதியில் ஸ்பெயினை 2-0 என வென்ற குரோஷியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது குரோஷியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி டிரைலர் தேதி!

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

SCROLL FOR NEXT