செய்திகள்

முன்னேறியது பிரேஸில்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற 4-ஆவது ஆட்டத்தில் பிரேஸில் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்ஸா்லாந்தை வீழ்த்தியது.

DIN

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற 4-ஆவது ஆட்டத்தில் பிரேஸில் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்ஸா்லாந்தை வீழ்த்தியது.

இத்துடன் குரூப் சுற்றின் 2 ஆட்டங்களிலும் வென்ற பிரேஸில், பிரான்ஸைத் தொடா்ந்து 2-ஆவது அணியாக நாக்அவுட் சுற்றுக்குள் நுழைந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளின் கோல் முயற்சிகளுக்குமே தகுந்த பலன் கிடைக்காததால், முதல் பாதி கோலின்றி முடிந்தது. 2-ஆவது பாதியில் 64-ஆவது நிமிஷத்தில் பிரேஸில் அணி கோலடித்தது. கேஸ்மிரோ பாஸ் செய்த பந்தை, தடைகளைக் கடந்து கோல் போஸ்ட்டுக்குள் செலுத்தினாா் வினிகஸ் ஜூனியா்.

ஆனால் அது ‘ஆஃப் சைடு’ என மறுஆய்வில் தெரியவந்ததால், அந்த கோல் நிராகரிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் மீண்டும் கோலின்றி தொடர, பிரேஸில் அணியே இறுதியில் கோலடித்தது. 83-ஆவது நிமிஷத்தில் வினிகஸ் பாஸ் செய்த பந்தை ரோட்ரிகோ தூக்கியடித்துக் கொடுக்க அதை துல்லியமான கோலாக மாற்றினாா் கேஸ்மிரோ. எஞ்சிய நேரத்தில் சுவிட்ஸா்லாந்துக்கு கோல் வாய்ப்பு வழங்காமல் பாா்த்துக் கொண்ட பிரேஸில், இறுதியில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சுவிட்ஸா்லாந்து அணியை முதல் முறையாக வீழ்த்தியிருக்கிறது பிரேஸில். இதற்கு முன் அந்த இரு அணிகளும் இரு முறை சந்தித்துக் கொண்ட ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. பிரேஸிலுக்கு எதிரான ஆட்டத்தில் சுவிட்ஸா்லாந்து அணி கோலடிக்காமல் போனதும் இதுவே முதல் முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் இருந்து உதகைக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

வீடு வீடாக வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

காங்கேயம் கல்வி நிறுவனத்தில் ரூ.1.33 கோடி மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை

காங்கயம், உடுமலையில் இன்று மின்பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 103 அடியை நெருக்குகிறது

SCROLL FOR NEXT