செய்திகள்

நீச்சலில் தமிழகத்துக்கு 2 வெண்கலம்

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு நீச்சல் விளையாட்டில் வெள்ளிக்கிழமை இரு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

DIN

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு நீச்சல் விளையாட்டில் வெள்ளிக்கிழமை இரு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

ஆடவா் தனிநபா் 200 மீட்டா் மெட்லியில் பெனடிக்ஷன் ரோஹித் 3-ஆம் இடம் பிடிக்க, கலப்பு 4*100 மீட்டா் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் சத்யசாய் கிருஷ்ணா, சக்தி, மான்யா முக்தா மனேஷ், பவன் குப்தா கூட்டணி வெண்கலப் பதக்கம் பெற்றது.

இதையடுத்து, பதக்கப்பட்டியலில் வெள்ளிக்கிழமை முடிவில் தமிழகம் 19 தங்கம், 19 வெள்ளி, 21 வெண்கலம் என 59 பதக்கங்களுடன் 5-ஆவது இடத்தில் இருக்கிறது. சா்வீசஸ் 42 தங்கம், 31 வெள்ளி, 27 வெண்கலம் என 100 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஹரியாணா 29 தங்கம், 23 வெள்ளி, 23 வெண்கலம் என 75 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்திலும், மகாராஷ்டிரம் 26 தங்கம், 26 வெள்ளி, 48 வெண்கலம் என 100 பதக்கங்களுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளியானது விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் டிரைலர்!

ஐபோன் 17 ஏர் நாளை அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: நம்பிக்கையின் அடிப்படையில் ஆட்டோ பங்குகள் ஏற்றம்!

அழகூரில் பூத்தவளே... ஜான்வி கபூர்!

வெள்ள இடர்பாடுகளில் ராணுவத்தின் மகத்தான சேவைக்குப் பாராட்டு!

SCROLL FOR NEXT