செய்திகள்

முத்தரப்பு டி20: வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான்

நியூசிலாந்தில் தொடங்கிய முத்தரப்பு டி20 போட்டியில் வங்கதேசத்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

DIN

நியூசிலாந்தில் தொடங்கிய முத்தரப்பு டி20 போட்டியில் வங்கதேசத்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

நியூசிலாந்து - பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டி நியூசிலாந்தில் இன்று முதல் தொடங்கியது. கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - வங்கதேசம் ஆகிய அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 78 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் வங்கதேச அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டும் எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. யாசிர் அலி அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். முகமது வாசிம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக ரிஸ்வான் தேர்வானார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக நிா்வாகிகள் 8 போ் மீதான வழக்கு தள்ளுபடி

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

SCROLL FOR NEXT