செய்திகள்

பஞ்சாபி பாடலுக்கு நடனமாடிய இந்திய அணி வீரர்கள்! (விடியோ)

வெற்றி கிடைத்தால் பஞ்சாபி பாடலுக்கு அனைத்து வீரர்களும் நடனமாட வேண்டும் என்பது வழக்கமாகி விட்டது.

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் ஆட்டத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தில்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக டேவிட் மில்லர் அறிமுகம் ஆனார். தெ.ஆ. அணியில் பவுமா, மஹாராஜ், ரபாடா ஆகியோர் இடம்பெறவில்லை. 

27.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தென்னாப்பிரிக்கா. குல்தீப் 4 விக்கெட்டுகளையும் வாஷிங்டன், சிராஜ், ஷாபாஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராகக் குறைந்த ரன்களை எடுத்தது தென்னாப்பிரிக்கா. அதற்கு முன்பு 1999-ல் நைரோபி, கென்யாவில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

எளிதான இலக்கை 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இந்திய அணி. ஷுப்மன் கில் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

ஒருநாள் தொடரை 2-1 என வென்ற இந்திய அணியினர், வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். ஷிகர் தவன் கேப்டனாக இருந்து தொடர் வெற்றி கிடைத்தால் பஞ்சாபி பாடலுக்கு அனைத்து வீரர்களும் நடனமாட வேண்டும் என்பது வழக்கமாகி விட்டது. அதன்படி தலேர் மெகந்தியின் போலோ தா ரா ரா பாடலுக்கு இந்திய வீரர்கள் நடனமாடியதன் காணொளி வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT