மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவும் இலங்கையும் மோதவுள்ளன.
மகளிர் ஆசியக் கோப்பை முதல் அரையிறுதிச் சுற்றில் தாய்லாந்தை எளிதாக வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு நுழைந்தது இந்திய அணி. மற்றொரு அரையிறுதிச் சுற்றில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 122 ரன்கள் எடுத்தது. ஹர்ஷிதா அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். நஷ்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
எளிதான இலக்கை எதிர்கொள்ள பாகிஸ்தான் பேட்டர் சிரமப்பட்டார்கள். நிதானமான ஆட்டதால் கடைசிக்கட்டத்தில் நெருக்கடி ஏற்பட்டது. கடைசி 3 ஓவர்களில் 18 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 7 விக்கெட்டுகள் மீதமிருந்தன. இதனால் பாகிஸ்தானின் வெற்றியே மீண்டும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கை பந்துவீச்சாளர்கள் அருமையாகப் பந்துவீசினார்கள். இதனால் கடைசி 4 ஓவர்களில் ஒரு பவுண்டரியும் அடிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்டர்கள் தடுமாறினார்கள். கடைசி ஓவரில் வெற்றி பெற பாகிஸ்தான் அணிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. கடைசிப் பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டன. 2 ரன்கள் எடுத்தால் சூப்பர் ஓவர் என்கிற நிலையில் ஒரு ரன் மட்டும் எடுத்து இன்னொரு ரன் எடுக்க முயன்றபோது ரன் அவுட் ஆனார் பாகிஸ்தான் பேட்டர் நிடா டர். இதனால் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற இலங்கை அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்தது. பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூஃப் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். நன்குப் பந்துவீசி 2 விக்கெட்டுகள் எடுத்த இனோகா ரணவீரா ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வானார். 14 வருடங்கள் கழித்து ஆசியக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இலங்கை தகுதியடைந்துள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிச்சுற்று சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.