செய்திகள்

வெளியேறுகிறது இந்தியா

ஃபிஃபா-வின் 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் மொராக்கோவிடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோற்றது.

DIN

ஃபிஃபா-வின் 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் மொராக்கோவிடம் 0-3 என்ற கோல் கணக்கில் தோற்றது.

குரூப் சுற்றில் மொத்தம் 3 ஆட்டங்கள் விளையாடப்படும் நிலையில், இந்தியா 2-இல் தோல்வி கண்டு குரூப் ஏ-வில் கடைசி இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா, பிரேஸில், மொராக்கோ அணிகள் தலா 1 வெற்றியுடன் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன. எனவே, குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் வென்றாலும் இந்தியா 4-ஆவது இடத்திலேயே நீடிக்கும்.

ஒவ்வொரு குரூப்பிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகளே காலிறுதிக்கு முன்னேறும். எனவே, உலகக் கோப்பை போட்டியிலிருந்து இந்தியா வெளியேறும் நிலையில் இருக்கிறது. கடைசி ஆட்டத்தில் பிரேஸிலை திங்கள்கிழமை சந்திக்கிறது இந்தியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நந்தம்பாக்கத்தில் தைவான் கல்வி மையம் தொடக்கம்

அசநெல்லிகுப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

மேற்குக் கரையில் இஸ்ரேல் தாக்குதல்

தெருவோர கடைக்காரா்களுக்கான கடன் திட்டத்தின் நிதி அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிஎன்பி-யின் முதல் புத்தாக்க கிளை திறப்பு

SCROLL FOR NEXT